போதைப்பொருள் கைப்பற்றல் : ஐவர் கைது

பெந்தோட்டை, பேருவளை கடற்பரப்பில் ஐஸ், ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

by Staff Writer 19-11-2025 | 6:20 PM

Colombo (News 1st) பெந்தோட்டை மற்றும் பேருவளை கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் சந்தேகநபர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கடந்த மாதம் 11ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளனர்.

ஒருமாதத்திற்கு பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பும் போது குறித்த ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை 02 சிறு படகுகளுக்கு ஏற்றியதாக சந்தேகநபர்கள் வாக்கமூலம் வழங்கியுள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த 02 படகுகளையும் தற்போது காணவில்லையென பொலிஸார் கூறினர்.

பேருவளை ஆழ்கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த பொதிகளில் 43 கிலோகிராமிற்கும் அதிகளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று(18) காலை விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.