.webp)
-603918-551229.jpg)
Colombo (News1st) SIRASA DANCING STAR GRAND FINALE இன்று இரவு 7.30க்கு இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நடைபெறுகின்றது.
சிரச தொலைக்காட்சி பல புதுமைகளைப் புகுத்தி பல்வேறு பரிமாணங்களில், புதிய படைப்புகளை சிருஷ்டித்து வரும் இளைஞர் அலைவரிசையாகும்.
2008ஆம் ஆண்டில் நாம் அறிமுகப்படுத்திய சிரச டான்சிங் ஸ்டார் இலங்கையின் நடன வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தற்போது இது ஆரம்பிக்கப்பட்டு 17 வருடங்களாகின்றன.
இளம் தலைமுறையினருக்காக டான்சிங் ஸ்டாரில் பல புதுமைகளைப் புகுத்தினோம்.
ஹிப்ஹொப்குக்காக இலங்கையில் நடைபெறும் ஒரேயொரு DANCING STAR போட்டி இதுவாகும்.
நடனக் கலைஞர்களாக தாம் திகழ வேண்டும் என்ற கனவுடன் 42 இளம் அணியினர் முதலாவது DANCING STAR தேர்வில் பங்குபற்றினர்.
நடனம், உடற்பயிற்சி, உடற்தகுதி என இந்தத் தேர்வில் 8 சுற்றுகள் காணப்பட்டன.
இது அழகாக இருந்தாலும் அதன் பின்னணி அவ்வளவு எளிதாக அமையவில்லை.
ஏனென்றால் பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களும் சர்வதேச தரத்தில் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டிருந்தனர்.
அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுற்றாக ஶ்ரீபொப் சுற்று அமைந்தது.
நாம் அனைவரும் விரும்பும் பழைய பாடல்கள், ஶ்ரீ பொப் ஊடாக எமக்கான பாணியில் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டது.
இப்போது நாம் இறுதித் தருணத்தை எட்டியுள்ளோம்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 6 அணிகள் களம் காணவுள்ளன.
DANCING STAR கிரீடத்திற்கான பெருங்கனவுடனான மாபெரும் போட்டி இது…
ஆம்.. இது வாழ் நாள் சாதனை..
SECRET SCOT
S L C RYTHM
TEAM IDS
FLOW DANCING CREW
DANCE FLAME
CS CREW
இந்த 6 அணிகளின் காணும் கனவுகளுக்கு இன்று என்ன நடக்கும்..?
இது.. அடுத்த கட்ட நகர்வுக்கான செயற்றிட்டம்
மேடை தயார்..
6 அணிகளும் போட்டிக்கு தயார்..
நிகழ்ச்சித் தயாரிப்புப் பணிகளும் நிறைவில்..
இரத்மலானை ஸ்டெய்ன் ஸ்ரூடியோவும் தயார்…
பரபரப்பான நிகழ்வை காண்பதற்காக இரவு 7.30 முதல் நீங்களும் கண்டு மகிழுங்கள்
இது ..
சிரச டான்சிங் ஸ்டார்…
மாபெரும் இறுதிப் போட்டி …
