.webp)

Colombo (News1st) லொக்கு பெட்டியின் உதவியாளர்கள் இருவர் அளுத்கமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலுக்கமைய இன்று(13) அதிகாலை அளுத்கம டிப்போ வீதியில் ரயில் கடவைக்கு அருகில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 06 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மற்றைய சந்தேகநபரிடமிருந்து 05 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 26 இலட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வங்கியின் ஊடாக 54 இலட்சத்திற்கும் அதிக தொகையை பரிமாற்றியுள்ளமை தொடர்பில் பொலிஸார் தகவல்களை வௌிகொணர்ந்துள்ளனர்.
லொக்கு பெட்டி என அழைக்கப்படும் நபரின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் ஊடாக ஈட்டப்பட்ட பணத்தை அவர்களே வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் உரகஸ்மன்ஹந்தி மற்றும் மஹஇந்துருவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
