.webp)

Colombo (News1st) திருகோணமலை - குச்சவௌி பிரதேச சபையின் தவிசாளரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினருமான ஏ. முபாரக் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ் போதரகம முன்னிலையில் இன்று(13) அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
யுத்த காலத்தில் வௌிநாட்டிலிருந்து நாட்டு வருகைதரவிருந்த நபரின் காணியொன்றுக்காக காணி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்க 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா முன்வைத்த பிணை கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.
தவிசாளரின் சாரதி மாத்திரம் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
சந்தேகநபருக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
