அரச செலவின சட்டமூலத்தில் ட்ரம்ப் கையொப்பம்

அரச செலவின சட்டமூலத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் கையொப்பம்

by Staff Writer 13-11-2025 | 10:57 AM

Colombo (News 1st) அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்ட அரச செலவின சட்டமூலத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த சட்டமூலத்தினூடாக 43 நாட்களாக தொடர்ந்த அமெரிக்க அரசாங்கத்தின் முடக்க நிலை முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது.

தற்போது 700,000-இற்கும் மேற்பட்ட அமெரிக்க அரச ஊழியர்கள் 43 நாட்கள் சம்பளம் இன்றி பணிபுரிகின்றனர்.

அத்துடன் விமான சேவை உள்ளிட்ட பல சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.