முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

by Staff Writer 12-11-2025 | 10:29 AM

Colombo (News1st) முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சற்று முன்னர் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமையவே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க சென்ற சந்தர்ப்பத்தில் பிரசன்ன ரணதுங்க கைது செய்யப்பட்டதாக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது. முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.