.webp)
-551111.jpg)
Colombo (News 1st) மன்னார் - பேசாலை பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தினால் இன்று(12) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேசாலை பகுதியில் 20 கிராம் 85 மில்லி கிராம் போதைப்பொருளுடன் 2022ஆம் ஆண்டு குறித்த நபர் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 36 வயதுடைய நபருக்கு மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் M.M.M.மிஹால் இன்று(12) ஆயுள் தண்டனை உத்தரவை பிறப்பித்தார்.
