.webp)

Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வட மாகாணத்தின் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காக விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது முக்கியமானது என கண்டறியப்பட்டதையடுத்து விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாடசாலைகளிலும் விளையாட்டு கழகங்களிலும் மேசைப்பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதனையடுத்து 170 மில்லியன் ரூபா செலவில் யாழ். உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணிப்படவுள்ளது.
