ஜனாதிபதி ஊடக விருது : MTV வலையமைப்பிற்கு விருதுகள்

ஜனாதிபதி ஊடக விருது விழாவில் MTV வலையமைப்பிற்கு பல விருதுகள்

by Staff Writer 11-11-2025 | 7:01 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ஊடக விருது விழாவில் நியூஸ் ஃபெஸ்ட், சக்தி FM, சக்தி TV, சிரச TV மற்றும் TV1 தொலைக்காட்சிகள் பல விருதுகளை வென்றுள்ளன.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கொழும்பு தாமரை தாடகத்தில் ஜனாதபதி ஊடக விருது வழங்கல் விழா இன்று(11) பிற்பகல் நடைபெற்றது.

வானொலி பிரிவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழிமூல செய்தி அறிக்கைக்கான விருதை நியூஸ் ஃபெஸ்ட்டின் செல்லசாமி நிலோசன் வென்றார்.

வானொலி பிரிவில் வருடத்தின் சிறந்த தேடல் நிகழ்ச்சிக்கான விருது நியூஸ் ஃபெஸ்ட்டின் துரைசாமி லட்சுமணன் வசமானது.

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு மக்கள் குரலில் ஒலிபரப்பப்பட்ட மலையகம் 200 தேடல் நிகழ்ச்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

தொலைக்காட்சி பிரிவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழிமூல செய்தி வாசிப்பாளருக்கான விருதை நியூஸ் ஃபெஸ்ட்டின் ஜெப்ரி ஜெபதர்ஷன் சுப்ரமணியம் மற்றும் நியூஸ் ஃபெஸ்ட்டின் தனுஷியா ஞானசேகரன் ஆகியோர் வென்றனர்.

தொலைக்காட்சி பிரிவில் வருடத்தின் சிறந்த ஆங்கில மொழிமூல நிகழ்ச்சி தொகுப்பாளர் விருதை TV1-இன் சொனாலி வனிகபதுகே வென்றார்.

தொலைக்காட்சி பிரிவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழிமூல நிகழ்ச்சி தொகுப்பாளர் நடுவர் குழாத்தின் விசேட விருதை நியூஸ் ஃபெஸ்ட்டின் இராஜேந்திரன் கோகுல்நாத் மற்றும் DAN TV-இன் புலேந்திரன் சுலக்‌ஷன் ஆகியோர் வென்றனர்.

வானொலி பிரிவில் வருடத்தின் சிறந்த வானொலி நிகழ்ச்சிக்கான விசேட நடுவர் குழாத்தின் விருதை சக்தி FM-இன் சிவாஜி கணேசன் பிரேம்காந்த் பெற்றுக்கொண்டார்.

தொலைக்காட்சி பிரிவில் வருடத்தின் சிறந்த தேடல் நிகழ்ச்சிக்கான விருதை நியூஸ் ஃபெஸ்ட்டின் லக்மால் கிரிந்திகல வென்றார்.