.webp)

Colombo (News 1st) கொட்டாஞ்சேனை 16ஆவது ஒழுங்கையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரும் அதற்கு உதவி புரிந்த மேலும் 03 சந்தேகநபர்களும் 02 பெண் சந்தேகநபர்களும் கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரும் அதற்கு உதவி புரிந்த சந்தேகநபரொருவரும் பெண் சந்தேகநபரும் கடந்த 09ஆம் திகதி யாழ்ப்பாணம் - A9 வீதியின் செம்மணி சந்தி பகுதியில் கார் , கையடக்கத்தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கிதாரிக்கு தங்குமிட வசதிகளை வழங்கியமை, போக்குவரத்து வசதிகளை வழங்கியமை ஆகிய விடயங்கள் தொடர்பில் கொழும்பு - கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய பகுதிகளிலிருந்து முச்சக்கர வண்டி , 02 கையடக்கத்தொலைபேசிகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொட்டாஞ்சேனை 16ஆவது ஒழுங்கையில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 43 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
