.webp)
-551077.jpg)
Colombo (News 1st) சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக இன்று(11) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹல் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலா 50,000 ரூபா ரொக்கப்பிணையிலும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 02 பிணைகளிலும் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2020 ஆகஸ்ட் 13ஆம் திகதியிலிருந்து 2024 ஜூன் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெகுசன ஊடக மற்றும் சுகாதார அமைச்சில் கடமையாற்றிய போது சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் இலங்கை தண்டணைக் கோவை சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
