.webp)
Colombo (News 1st) அனுராதபுரம் - தலாவ பகுதியில் இன்று(10) பிற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 46 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகக் காணப்படுவதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்.சீ.டீ.ஆரியரத்ன தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் 09 பேர் பாடசாலை மாணவர்கள் என அவர் கூறினார்.
அனுராதபுரம் - தலாவ பகுதியில் இருந்து 411 இலக்க கிராமத்திற்கு பயணித்த தனியார் பஸ் ஜயகங்க சந்தியைக் கடந்த போது விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பஸ்ஸில் 47 பயணிகள் இருந்துள்ளனர்.
பஸ் வேகமாக வந்ததாகவும் இதன்போது மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவரொருவர் தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பஸ் திருப்பப்பட்ட போது கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
