.webp)

Colombo (News1st) சவூதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் ஃபைசால் பின் ஃபர்ஹானை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ரியாத் நகரில் சந்தித்தார்.
வருடாந்த உலக சுற்றுலா மாநாட்டில் பங்கேற்பதற்காக வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் உறுதிப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்குள் உருவாக்கப்பட்டுள்ள முதலீட்டுக்கான உகந்த சூழல் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் முதலீட்டுக்கான வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்ளுமாறு சவூதியிலுள்ள முதலீட்டாளர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இருநாட்டு வர்த்தக சபைகளுக்கும் இடையில் ஸ்தாபிக்கப்படவுள்ள முதலாவது வர்த்தக பேரவை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாட்டுள்ளது.
பலஸ்தீன மோதலில் நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் சவூதியின் முயற்சிகளை பாராட்டிய வௌிவிவகார அமைச்சர், அதற்காக இலங்கையின் ஒத்துழைப்புக்களை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
இலங்கை - சவூதி அரேபியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வௌியிடப்பட்ட முத்திரையை சவூதி வௌிவிகார அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் விஜித ஹேரத்திடம் வழங்கினார்.
