.webp)

Colombo (News 1st) ஆசிய அபிவிருத்தி வங்கியால் நாட்டிற்கான 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவி வழங்கும் நோக்கில் இந்த கடனுதவி வழங்கப்படுகின்றது.
இலங்கையின் நிதி மற்றும் கடன் ஸ்திரத்தன்மையை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும்போது பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக இந்த கடன் தொகைக்கு அனுமதி வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono தெரிவித்துள்ளார்.
