.webp)

Colombo (News 1st) வத்தளையில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் 02 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை அல்விஸ் டவுன் சந்தி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த காரை துரத்தி பிடித்து முன்னெடுத்த சோதனையின் போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆயுதங்களை மற்றொருவருக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனிடையே, வத்தளை - மாபோல பகுதியில் வைத்து குறித்த கைத்துப்பாக்கியை பெற்றுக்கொள்ள வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 33 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
