.webp)

Colombo (News 1st) நாட்டின் மேற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட 335 கிலோகிராம் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் துபாயில் வசிக்கும் தினுக இருக்கின்றமை வௌிக்கொணரப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகின் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணைகளுக்கமைய இந்த தகவல் வௌிக்கொணரப்பட்டுள்ளது.
படகின் உரிமையாளர் நேற்று முன்தினம்(01) காலியில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் 07 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
போதைப்பொருட்கள் கடத்தப்பட்ட படகிலிருந்த 06 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று(03) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
படகிலிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களின் பெறுமதி 500 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும்.
