கெஹெலிய குடும்பத்தினரின் மனுக்கள் தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

by Staff Writer 03-11-2025 | 2:11 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ​கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை இரத்து செய்து ரிட் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 03 மனுக்களையும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த மனுக்களுடன் தொடர்புடைய அடிப்படை விடயங்களை ஆராய்ந்த ஜனக் டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய அவர்களின் சொத்துக்களை முடக்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.