சபேசன் 'சரிகமப'-வின் இறுதிச்சுற்றுக்கு தெரிவு

சக்தி சுப்பர் ஸ்டார் சீசன் 5-இல் விருது வென்ற சபேசன் இந்தியாவின் 'சரிகமப' இசை நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு தெரிவு

by Staff Writer 03-11-2025 | 4:26 PM

Colombo (News 1st) தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை நடத்துகின்ற 'சரிகமப' இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையை சேர்ந்த சுகிர்தராஜா சபேசன் தெரிவாகியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த சபேசன் 2013ஆம் ஆண்டு சக்தி சுப்பர் ஸ்டார் சீசன் 5-இன் இரண்டாவது வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் திறமையை வௌிப்படுத்தி பல கட்டங்களைக் கடந்து இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்.