500 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

மேற்கு கடலில் 500 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

by Staff Writer 02-11-2025 | 2:26 PM

Colombo (News 1st) நாட்டின் மேற்கு கடலில் நீண்ட நாள் படகிலிருந்து 350 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றின் பெறுமதி 500 கோடி ரூபாவிற்கும் அதிகமென பாதுகாப்பு பிரதியமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.

குறித்த படகிலிருந்த 06 மீனவர்களும் இதன்போது கைது செய்யப்பட்டிருந்தனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படை மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் 400 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 54,870 கிலோகிராம் போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

5267 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 16 இலட்சத்து 83 ஆயிரத்து 691 போதைவில்லைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.