சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் திருட்டு

சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் திருட்டு

by Chandrasekaram Chandravadani 02-11-2025 | 7:20 PM

Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் நேற்றிரவு(01) நுழைந்த சிலர் அங்கிருந்த 03 உண்டியல்களை உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலய CCTV கமெராக்களுக்குரிய DVR கருவியும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உடைக்கப்பட்ட 03 உண்டியல்கள் ஆலய வளாகத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சீதாஎலிய சீதையம்மன் ஆலய பாதுகாவலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.