.webp)
-602792-550725.jpg)
Colombo (News1st) இலங்கை சுங்கத்தின் வருமானம் 2 ட்ரில்லியன் ரூபாவை கடந்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான 2 தசம் 115 ட்ரில்லியன் ரூபா என்ற வருமான இலங்கை நோக்கி இலங்கை சுங்கம் வெற்றிகரமாக பயணித்து வருவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வரி வருமானத்தை சேகரிக்கும் திணைக்களத்தினால் வரலாற்றில் வருடத்தில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் இதுவென சுங்கத் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கத்தால் ஈட்டப்பட்ட வருமானத்தில் மோட்டார் வாகனங்கள் மூலம் பெறப்பட்ட 630 பில்லியன் ரூபாயும் இதில் அடங்கும்.
இந்த வருட இறுதிக்குள் வரி வருமான இலக்கை விடவும் அதிகமாக 300 பில்லியன் ரூபாவை வசூலிக்க முடியும் என சுங்கத் திணைக்களம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
