போர் நிறுத்தத்தை நீடிக்க இணங்கிய பாக். - ஆப்கன்

போர் நிறுத்தத்தை தொடர்ந்தும் நீடிக்க பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இணக்கம்

by Staff Writer 31-10-2025 | 7:38 PM

Colombo (News1st) போர் நிறுத்தத்தை தொடர்ந்தும் நீடிப்பதற்கு பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இணக்கம் தெரிவித்துள்ளன.

பல ஆண்டுகளாக வலுப்பெற்றிருந்த எல்லைப் பிரச்சினைகளை தொடர்ந்து இஸ்தான்புல்லில் இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கட்டாருடன் இணைந்து இந்தப் பேச்சுவார்த்தைக்கு துருக்கி மத்தியஸ்தம் வகித்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இணங்கியுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த 19 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டது.

இந்த வழிமுறை எவ்வாறு செயற்படுத்தப்படும் என்பதை தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 6 ஆம் திகதி இஸ்தான்புல்லில் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இரு தரப்பினருடனும் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாக துருக்கியும் கட்டாரும் அறிவித்துள்ளன.

2021ஆம் ஆண்டு காபூலை தலிபான்கள் கைப்பற்றியது முதல் இரு நாடுகளும் மிகக் கடுமையான இராணுவ மோதல்களை எதிர்கொண்டன.

இம்மாதத்தில் இரு நாடுகளும் பரஸ்பர வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுடன் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் முக்கிய கடவைகளை மூடியதால் மோதல்கள் வலுப்பெற்றன.