.webp)
-602798-550755.jpg)
Colombo(News1st) பிரித்தானிய இளவரசர் எனும் பட்டத்தை அகற்றி வின்சர் மாளிகையிலிருந்து வௌியேறுமாறு மன்னர் சார்ள்ஸ் தனது சகோதரரதான அன்ட்ரூவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை மன்னர் மேற்கொள்வார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது.
தம்மீதான குற்றச்சாட்டுகளை அன்ட்ரூ தொடர்ந்து மறுத்தாலும் இந்த கண்டனங்கள் அவசியமானவை என கருதப்படுவதாக பக்கிங்ஹாம் மாளிகை குறிப்பிட்டுள்ளது..
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புகளை பேணிய இளவரசர் அன்ட்ரூ மீது பதின்ம வயது பெண்ணுடன் பாலியல் தொடர்பை பேணிய குற்றச்சாட்டும் அண்மையில் சுமத்தப்பட்டது.
தமது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து யோர்க் பிராந்தியத்தின் கோமகன் உள்ளிட்ட பல அரச பதவிகளை இதற்கு முன்னர் அவர் துறந்தமை குறிப்பிடத்தக்கது.
