பாதுகாப்பு கோரும் எதிர்க்கட்சி பா. உறுப்பினர்கள்

பாதுகாப்பு கோரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்

by Staff Writer 31-10-2025 | 7:10 PM

Colombo (News1st) எதிர்க்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிக்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஊடாக பொலிஸ் மாஅதிபரிடம் கோரியுள்ளனர்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(31) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில்  நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி ப்ரியந்த வீரசூரியவும் அழைக்கப்பட்டிருந்தார்.

எதிர்க்கட்சியின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக இதற்கு முன்னர் சபாநாயகரிடம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கமைய இந்த கலந்துரையாடலுக்கு பொலிஸ் மாஅதிபரும் அழைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.

எவ்வாறாயினும், இந்தக் கலந்துரையாடலில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.