விமானப் பணிப்பெண்ணை தாக்கிய நபருக்கு பிணை

விமானப் பணிப்பெண்ணை விமானத்தில் வைத்து தாக்கியதாகக் கூறப்படும் சவுதி அரேபிய பிரஜை பிணையில் விடுவிப்பு

by Staff Writer 29-10-2025 | 6:36 PM

Colombo (News 1st) விமானப் பணிப்பெண்ணை விமானத்தில் வைத்து தாக்கியதாகக் கூறப்படும் சவுதி அரேபிய பிரஜை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவிலிருந்து கடந்த 26ஆம் திகதி நாட்டிற்கு வந்த விமானத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபர் 15,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 200,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.