.webp)

Colombo (News 1st) மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட மதிப்பீடுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்காக 10 பில்லியன் ரூபா செலவின மதிப்பீட்டை நிதியமைச்சு அங்கீகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் முறைமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கிடைக்கப்பெற்ற பின்னர் தேர்தலை நடத்த முடியுமென அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென தவிசாளர் தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் முறைமை குறித்து விரைவில் இணக்கப்பாட்டை எட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர், கலாநிதி சந்தன அபேரத்னவிடம் நியூஸ் ஃபெஸ்ட்டிடம் தெரிவித்தார்.
