மத்தளை விமான நிலையம் தொடர்பான அறிவிப்பு

மத்தளை விமான நிலையம் வன விலங்குகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பானது - சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை

by Staff Writer 29-10-2025 | 5:16 PM

Colombo (News 1st)  மத்தளை சர்வதேச விமான நிலையம் வன விலங்குகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பான விமான நிலையமென சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

விமான நிலையத்திற்கு வன விலங்குகளிடமிருந்து ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுக்கப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமைக்கு அமைய இந்த உறுதிப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மத்தளை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்தார்.

குறித்த விமான நிலையத்திற்கு தற்போது 04 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

புதிய விமான நிறுவனங்கள் வருவதன் மூலம் விமான நிலையத்தின் செயற்பாட்டு நட்டங்களைக் குறைத்துக்கொள்ள முடியுமென பிரதிமைச்சர் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்