.webp)

Colombo (News 1st) கல்கிசை நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் களஞ்சிய அறையிலிருந்த கைத்துப்பாக்கியை திருடிய கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மெகசின் சிறைச்சாலையின் கைதியொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் F.U.வூட்லர் தெரிவித்தார்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலுள்ள 03 கைதிகள் நீதிமன்றத்தின் துப்புரவு பணிகளுக்காக இன்று(29) அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
குறித்த பணிகளின் நிறைவில் கைதியொருவர் வழக்கு சான்றுப் பொருட்கள் களஞ்சிய அறையிலிருந்து கைத்துப்பாக்கி, மெகசின் ஆகியவற்றை திருடி மீண்டும் சிறைச்சாலை பஸ்ஸில் ஏறியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
குறித்த கைத்துப்பாக்கி சூட்சுமமான முறையில் உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செக்கொஸ்லொவெக்கியாவில் தயாரிக்கப்பட்ட 09 மில்லிமீட்டர் ரக கைத்துப்பாக்கியே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
