.webp)
-602548-602609-550609.jpg)
Colombo (News 1st) வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலை சம்பவத்தின் மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேச சபை தவிசாளர் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளமை வௌிக்கொணரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரி, அவரது மனைவி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய நபர் ஆகிய சந்தேகநபர்கள் நால்வரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கடந்த 22ஆம் திகதி பிரதேச சபைக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
