4 புதிய மேல் நீதிமன்றங்களுக்கு அமைச்சரவை அனுமதி

ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டு திட்டத்தின் கீழ் 4 புதிய மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 28-10-2025 | 6:49 PM

Colombo (News 1st) Colombo (News 1st) ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டு திட்டத்தின் பிரகாரம் புதிதாக 04 மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கடந்த காலங்களில் கொழும்பு - 07 பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 04 கட்டடங்களை இதற்காக ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்றிட்டம் கடந்த ஏப்ரல் 09ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த செயற்றிட்டத்தில் 2025 முதல் 2029ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் அடைய வேண்டிய இலக்குகளும் அடங்குகின்றன.