.webp)

Colombo (News 1st) 2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இந்தியா சாம்பியனானது.
இலங்கை இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.
இதில் இந்தியா, இலங்கை, மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்த 200-இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்தியா 20 தங்கம், 20 வௌ்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாம்பியனானது.
இலங்கை அணி 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களையும் வென்று இந்த ஆண்டுக்கான தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.
