பிரமிட் திட்டத்தை நடாத்திச் சென்ற 7 பேர் கைது..

சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடாத்திச் சென்ற 07 சந்தேகநபர்கள் கைது..

by Staff Writer 24-10-2025 | 10:37 PM

சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடாத்திச் சென்ற 07 சந்தேகநபர்கள் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரமிட் திட்டத்தை நடாத்திச் செல்லுதல், ஊக்குவித்தல் மற்றும் அந்த திட்டத்தை முகாமைத்துவம் செய்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலானை, பன்னிப்பிட்டிய, கல்னேவ, ஹோகந்தர, பேராதனை, கொழும்பு 04 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 64 வயதுகளுக்கு உட்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.