செவ்வந்திக்கு உதவிய படகோட்டி கைது..

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற படகின் படகோட்டி கைது..

by Staff Writer 24-10-2025 | 10:40 PM

கனேமுல்ல சஞ்ஜீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் படகின் படகோட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவருடன் படகில் மேலும் இரண்டு பேர் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.  

அவர்களில் ஒருவர் வேறொரு குற்றம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ளார்.

மற்றைய நபரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவி வழங்கிய ஆனந்தன் என்ற நபரிடம் இருந்து 02 நவீன ரக துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனந்தன் என்ற குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் சில சந்தர்ப்பங்களில் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் சில குற்றவாளிகளுடன் சட்ட விரோதமாக இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல உதவி வழங்கியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.