.webp)
Colombo (News 1st) பியல் மனம்பேரி எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று(22) Skype தொழில்நுட்பத்தினூடாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சம்பத் மனம்பேரிக்கு அடைக்கலம் வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சரித் மதுஷங்கவையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சம்பத் மனம்பேரி தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சம்பத் மனம்பேரி தற்போது மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.