.webp)
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் சில அரிசி வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பச்சை அரிசியின் விலை 210 ரூபாவாகவும்
நாட்டரிசி விலை 220 ரூபாவாகவும்
சம்பா அரிசி விலை 230 ரூபாவாகவும்
பொன்னி சம்பா அரிசி விலை 240 ரூபாவாகவும்
கீரி பொன்னி அரிசி விலை 255 ரூபாவாகவும் நிர்ணயித்து வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் அல்லது வர்த்தகர்கள் இந்த அதிகபட்ச சில்லறை விலைகளின் கீழ் அரிசியை விற்பனை செய்ய வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.