.webp)
Colombo (News 1st) ஜப்பானின் இரும்பு பெண்மணி அந்நாட்டின் முதல் பிரதமராக இன்று(21) வரலாற்றில் இடம்பிடித்தார்.
64 வயதான Sanae Takaichi ஜப்பான் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
1961ஆம் ஆண்டு நாரா பிராந்தியத்தில் பிறந்த Sanae Takaichi, 1996ஆம் ஆண்டு முதல் தடவையாக ஜப்பான் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
மக்கள் ஆதரவுடன் கடந்த 10 சந்தர்ப்பங்களிலும் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை தக்கவைத்துக்கொண்டார்.
ஜப்பானின் ஆளும் கட்சியான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவரான Sanae Takaichi இன்று(21) இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டி புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
64 வயதான அவர் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக கடந்த 03ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் பிரதமராக பதவி வகித்த ஷிகேரு இஷிபா கட்சி தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து Sanae Takaichi நியமிக்கப்பட்டார்.
ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு டயட் சபையில் பெரும்பான்மை இன்மையால் இம்முறை வாக்கெடுப்பிற்கு முன்னதாக அவர்கள் JIP கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தார்கள்.
வாக்கெடுப்பில் பாராளுமன்ற கீழவையில் 465 ஆசனங்களில் Sanae Takaichi 237 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
பாராளுமன்ற மேலவையில் 248 ஆசனங்களில் 124 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
ஜப்பானின் 104ஆவது பிரதமராக Sanae Takaichi பதவியேற்பார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய கடந்த 5 வருடங்களில் ஜப்பான் பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 04ஆவது பிரதமராக இவர் பதிவாகியுள்ளார்.