.webp)
Colombo (News 1st) செயலிழந்துள்ள லங்கா கவர்மன்ட் க்ளவுட் சேவை, தற்போது 50 வீதமளவில் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
க்ளவுட் கட்டமைப்பு வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பிரிவுகள், நாளை(20) முதல் பொதுமக்கள் சேவைக்காக செயற்படுவதற்கான இயலுமை ஏற்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகள் நிறுவனத்தின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது அதன் நிலைமை தொடர்பில் ஆராய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
லங்கா கவர்மன்ட் க்ளவுட் சேவை செயலிழந்தமையினால் 40க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆட்பதிவு திணைக்களம், ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களம், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒன்லைன் சேவைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.