.webp)
Colombo (News 1st) PCID எனப்படும் குற்றச் செயல்களினூடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவு இன்று(20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது பொலிஸ் திணைக்களத்தின் கீழ் ஒரு பிரிவாக செயற்படுகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் தலைமையில் புதிய பிரிவு திறந்து வைக்கப்பட்டது.
குற்றச் செயல்களினூடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி சபாநாயகர் அதில் கையொப்பமிட்டதுடன், அது தொடர்பான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சட்டம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டம் குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதில் உள்ள தடைகளைத் தளர்த்தியுள்ளதுடன் விசாரணை அதிகாரங்களை விரிவுபடுத்தியது.
குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை விசாரித்தல், தடை செய்தல், பறிமுதல் செய்தல் மற்றும் நீக்குவதற்கான முறையான செயன்முறையை இந்த சட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.