இஷாராவிற்கு அடைக்கலம்: மூவர் விளக்கமறியல் நீடிப்பு

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலமளித்த சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

by Staff Writer 20-10-2025 | 8:19 PM

Colombo (News 1st) கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னர் இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 03 சந்தேகநபர்களும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று(20) பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌஷல்ய முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த 17 ஆம் திகதி குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.