26 இலட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை

அயோத்தியில் 26 இலட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை

by Staff Writer 20-10-2025 | 12:50 PM

Colombo (News 1st)


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் அயோத்தி நகரில் ஒரே இடத்தில் 26 இலட்சத்திற்கும் அதிக அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஒரே சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி 26 இலட்சத்து 17 ஆயிரத்து 215 அகல் விளக்குகளை ஏற்றி இந்த  சாதனையை படைத்துள்ளனர்.

ஏற்றப்பட்ட அகல் விளக்குகளின் எண்ணிக்கையை ட்ரோன் கெமராக்களின் உதவியுடன் கின்னஸ் சாதனை நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

இதனிடையே, இரண்டாயிரத்து 128 பேர் ஒரே சந்தர்ப்பத்தில் ஆரார்த்தி எடுத்தமையும் கின்னஸ் சாதனையாக பதிவாகியுள்ளது.

இரு கின்னஸ் சாதனைகளுக்கான சான்றிதழ்களையும் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.