.webp)
Colombo (News 1st) இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 'கம்பஹா பபா' வழங்கிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மஹபாகே அதிவேக வீதியின் 18ஆம் மைல்கல் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் T-56 வகை தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தோட்டாக்கள் கெஹெல்பத்தர பத்மேவினால் வழங்கப்பட்டதாக பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 'கம்பஹா பபா' குறிப்பிட்டார்.
சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்திற்கு தப்பிச்சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இஷாராவிற்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் 72 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.