.webp)
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிராகரிப்பதற்கு அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
தற்போதுள்ள முறைமைக்கு அமைய, அமைச்சர் அல்லது பிரதியமைச்சருக்கு அமைச்சின் வரப்பிரசாதங்களின் கீழ் எரிபொருள் மற்றும் சம்பளம் என்பன வழங்கப்பட வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளின் கீழ் எரிபொருள் மற்றும் சம்பளம் ஆகியன கிடைக்க வேண்டும் என்பதும் சட்டத்திற்குட்பட்டதாகும்.
அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவின் கீழ் மாதாந்த சம்பளத்தை மாத்திரம் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
அமைச்சர்களுக்கான கொடுப்பனவின் கீழ் எரிபொருள் கொடுப்பனவை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.