.webp)
கொழும்பிலிருந்து அம்பாறை வரை நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ்ஸொன்றில் போதைப்பொருளை கொண்டுச்சென்ற 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று அதிகாலை முன்னெடுத்த சோதனையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருளை கொண்டுச் சென்ற குற்றச்சாட்டில் குறித்த பஸ்ஸின் சாரதியும், நடத்துநர் மற்றும் பயணியொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 10 கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர்கள் நீண்ட நாட்களாக இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றமை விசாரணைகளில் வௌிகொணரப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.