நேபாளத்தில் கைதான இஷாரா அழைத்துவரப்பட்டார்..

நேபாளத்தில் கைதான இஷாரா செவ்வந்தி நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்..

by Staff Writer 15-10-2025 | 7:11 PM

Colombo (News 1st) நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 05 சந்தேகநபர்களையும் ஏற்றிய விமானம் இன்றிரவு(15) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

சந்தேகநபர்களை ஏற்றிய UL182 இலக்க விமானம் நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 3.30 அளவில் பயணத்தை ஆரம்பித்தது.

இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேற்று மாலை நேபாளத்திற்கு சென்றனர்.

உதவி  பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கிஹான் சந்திம ஆகியோர் நேபாள பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.