.webp)
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி பெண்கள் பற்றிய உலகத் தலைவர்களின் மாநாட்டில் இன்று பங்கேற்கவுள்ளார்.
"ஒரு எதிர்காலம், பெண்களுக்கான நவீன, துரிதமான அபிவிருத்தி" எனும் தொனிப்பொருளில் நடைபெறும் பெண்கள் தொடர்பான உலகத் தலைவர்கள் மாநாட்டை சீன அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, பிரதமர், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லீ குவாங் ஆகியோருடனும் இருதரப்புச் சந்திப்புகளில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.