.webp)
கிளிநொச்சி, பூநகரி - பரந்தன் பிரதான வீதியின் 20ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தையடுத்து சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதுடன் காயமடைந்த பூநகரியைச் சேர்ந்த 82 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய சாரதியை வாகனத்துடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்