.webp)
Colombo (News 1st) மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(12) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள பகுதியிலிருந்து ஒருதொகை தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்து பல்வேறு வகையான 448 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.