தினமும் 15பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிப்பு

தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிப்பு..

by Staff Writer 11-10-2025 | 10:48 PM

நாட்டில் தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மார்பகப் புற்றுநோயினால் நாளாந்தம் 3 பெண்கள் உயிரிழப்பதாகவும் அமைச்சு கூறியது.

மார்பகப் புற்றுநோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்தால் நோயாளர்களை முழுமையாக குணப்படுத்த முடியுமென சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் பெண்கள் மத்தியில் பதிவாகும் புற்றுநோய் வகைகளில் மார்பகப் புற்றுநோய் பிரதானமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் ஒக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோய் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் சுய  பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சு தெரிவித்தது.