இ.மத்திய வங்கியின் நி.குழுவுக்கு புதிய உறுப்பினர்

இலங்கை மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமனம்

by Staff Writer 11-10-2025 | 10:53 PM

இலங்கை மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவின் புதிய உறுப்பினராக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி எவன் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒக்டோபர் 02 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஊடகப்பிரிவு அறிவித்தது.

இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பொதுக்கொள்கைகளைத் தீர்மானிப்பதற்குமான பொறுப்பு மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவுடம் காணப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின்படி மத்திய வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்களாகவும் செயற்படுகின்றனர்.

நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ரஜீவ் அமரசூரிய விலகியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி எவன் விக்ரமசிங்க அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.