முன்பிணை வழங்க கோரி மனுஷ நாணாயக்கார விண்ணப்பம்

முன்பிணை வழங்க கோரி மனுஷ நாணாயக்கார விண்ணப்பம்

by Staff Writer 08-10-2025 | 10:24 PM

Colombo (News 1st) முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணாயக்கார தமது உத்தியோகபூர்வ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி விவசாயத்துறை தொழிலுக்காக தமக்கு சார்பான அரசியல் ஆதரவாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று(08) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார தாக்கல் செய்துள்ள விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

விடயங்களை ஆராய்ந்த நீதவான் முன்பிணை தொடர்பான உத்தரவை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.